#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. நம்ம குக் வித் கோமாளி கனியா இது.! ஹீரோயின்களையே ஓவர்டேக் செய்துடுவார் போல! ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானவர் கனி. இவர் அசத்தலாக சமைத்து குக் வித் கோமாளி சீசன் 2வின் வெற்றியாளரானார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காரக்குழம்பு கனி என செல்லமாக அழைக்கப்பட்ட இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் ஆவார். மேலும் நடிகைகள் விஜயலக்ஷ்மி மற்றும் நிரஞ்சனாவின் மூத்த சகோதரி ஆவார். கனி ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். மேலும் தற்போது யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கனி தற்போது அழகான புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.