"என்னிடமும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி கேட்டார்கள்..." விஜய் பட நடிகையின் பகிர் பேட்டி.!



i-strictly-say-no-to-adjustment-vijay-movie-actress-ope

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் அனு கிருஷ்ணா. இவர் தளபதி விஜய்க்கு  ஃப்ரெண்ட்ஸ் படத்தில் சிறுவயது தங்கையாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கத்தி திரைப்படத்திலும் கிராமத்து தங்கையாக இவர் நடித்திருந்தார்.

இவர் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு  இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் தங்கி தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல படங்களிலும் நடித்து வருகிறார்.

anukrishna

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரை மட்டும்தான் பிடிக்கும் எனக் கூறிய இவர் ரஜினிகாந்த் நடிக்கின்ற படத்தில் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் கிடைத்தாலும் தான் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சினிமாவில் இருக்கக்கூடிய அட்ஜஸ்ட்மென்ட் பற்றியும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

anukrishna

சினிமா துறையில் நிலவும் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசிய இவர் தன்னிடமும் நிறைய பேர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டதாகவும்  தான் அதற்கு மறுத்து விட்டதாகவும் ஓபன் ஆக தெரிவித்துள்ளார். சினிமா இல்லை என்றால் வேறு ஏதேனும் ஒரு துறையில் வேலை செய்து என்னுடைய காலத்தை ஓட்டி விடுவேன். அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் எனக்கு தேவை இல்லை என அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அனு கிருஷ்ணா.