திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தோனியை வைத்து எந்த மாதிரியான படம் எடுப்பேன்" - எல்ஜிஎம் ப்ரோமோஷனில் சாக்ஷி தோனி பேட்டி.!
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் எம்எஸ்.தோனி 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் சாம்பியன் பட்டத்தை வென்றது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இயற்கை விவசாயம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த தோனி சினிமா பட தயாரிப்பிற்கு என ஒரு நிறுவனத்தை நிறுவினார். அதன் மூலம் முதன்முறையாக தமிழ் படத்தை தயாரித்து இருக்கிறார் எம்எஸ்.தோனி.
தோனியின் தயாரிப்பில் ரமேஷ் தமிழ்மணி இயக்கம் மற்றும் இசையில் வருகின்ற 28ஆம் தேதி 'எல்ஜிஎம்' என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தோனி மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனியின் மனைவி எம்எஸ்.தோனியை வைத்து திரைப்படம் இயக்கினால் அது ஆக்சன் படமாக தான் இருக்கும் என தெரிவித்தார். மேலும் நல்ல கதை கிடைத்தால் நடிப்பதற்கு தோனி பரிசீலனை செய்வார் என்று கூறிய அவரது மனைவி சாக்ஷி தோனி, திரைப்படத் துறைக்கு வர வேண்டும் என்பது தன்னுடைய ஐடியா என்று தெரிவித்திருக்கிறார்.