மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் ஆண்டனியின் இந்த நிலைமைக்கு இவர்தான் காரணமாம்! அவரே கூறிய தகவல்!
தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது இசையில் வெளியான பெரும்பாலான பாடல்கள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. வேட்டைக்காரன், காதலில் விழுந்தேன், சலீம், நான் போன்று எத்தனையோ படங்களின் வெற்றி பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார் விஜய் ஆண்டனி.
தற்போது இசை அமைப்பதிலுருந்து விலகி முழுநேர நடிகராக மாறிவிட்டார் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. பிச்சைகாரன் திரைப்படம் விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் என்றே கூறலாம்.
சமீபத்தில் திமிரு புடுச்சவன் என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் விஜய் ஆண்டனி. படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இளையராஜா 75 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி தான் இசை அமைப்பாளர் ஆனதுக்கு, தற்போது நடிகராக ஆனதுக்கும் இசைஞானி இளையராஜாதான் காரணம் என கூறியுள்ளார்.