மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விழா மேடையில் வைத்து ஏ.ஆர். ரஹ்மானை திட்டிய இளையராஜா! எதற்காக தெரியுமா?
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில், இசைஞானி இளையராஜாவின் 75 பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழாவும், பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அவை நேற்றும், நேற்றைக்கு முதல் நாளும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது .
இதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஆடி,பாடி விழாவை சிறப்பித்தனர்.மேலும் பல வெற்றிப்படங்களில் நடித்த பிரபலங்களும், இளையராஜாவின் இசைப் பயணம் குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில் அந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துகொண்டார்.அவரும் இளையராவை பற்றி புகழ்ந்து பேசினார்.
இந்நிலையில் விழாவை தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, ‘ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்டு வாசிக்க, இசைஞானி இளையராஜா ஒரு பாடலைப் பாடுவார்’ என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து இளையராஜா, மெளனராகம் படத்திலிருந்து ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைப் பாடினார். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், கீபோர்டில் இசைமையைத்தார்.
அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் சற்று தவறாக வாசித்துவிட, உடனே இளையராஜா, ‘ஏன் இப்படி வாசிக்கிறே? உனக்குத்தான் இந்த டியூன் தெரியுமே’ என்று செல்லமாக திட்டினார்.அதைகேட்ட ரஹ்மான் வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே கீபோர்டை விட்டு விலகிச் சென்றார்.