மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நண்பன் பட நாயகி வாழ்வில் இப்படியொரு சோகமா? மேக்கப் இன்றி விமானநிலையத்தில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி!!
தமிழில் கேடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜயுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகை இலியானா தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆவார் இவர் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமின்றி அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நடிகை இலியானா ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ நீபோன் என்ற போட்டோகிராபரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. மேலும் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து இலியானா எந்த பதிலையும் கூறவில்லை ஆனால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை மட்டும் தொடர்ந்து வெளியிட்டு கொண்டே வந்தார்.
இந்நிலையில் சமீபகாலமாக அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தது. மேலும் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த தாங்கள் நெருக்கமாக இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இலியானா மேக்கப் இன்றி தனியாக தனது சூட்கேஸுடன் விமான நிலையத்திற்கு வந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.