திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களுக்கு ஷாக்... இந்தியன் 2 திரைப்படத்தில் 'மிஸ்' ஆகும் முக்கிய கேரக்டர்.!! இயக்குனர் சங்கர் பகிர்ந்த தகவல்.!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சங்கர் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்தத் திரைப்படம் வருகின்ற ஜூலை 12-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தைப் பற்றிய முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் இயக்குனர் சங்கர்.
இந்தியன்
சங்கர் இயக்கத்தில் ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் கமல்ஹாசன் மனிஷா கொய்ராலா கவுண்டமணி ஆகியோரின் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.
இந்தியன் 2
இந்நிலையில் 28 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் சங்கர். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், ராகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி மற்றும் சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.
இதையும் படிங்க: வைரலாகும் சமந்தாவின் பதிவு.! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!?
இயக்குனர் சங்கர் பகிர்ந்த முக்கிய தகவல்
திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாவதை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தைப் பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அந்தத் தகவலின்படி இந்தியன் திரைப்படத்தில் சேனாபதியின் மனைவியாக நடித்த சுகன்யா கதாபாத்திரம் இந்தியன் 2 திரைப்படத்தில் இடம் பெறாது என தெரிவித்துள்ளார். மேலும் அந்த கதாபாத்திரத்தின் தேவை இல்லாததால் இந்தத் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரத்தை வடிவமைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: "இயக்குனர்கள் அந்த விஷயத்தை சொல்லத் தயங்குகிறார்கள்" நடிகை பார்வதி ஆதங்கம்.!?