#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன்டிவி-யில் இந்த 3 சீரியல்களும் முடியப்போகிறதா.? வருத்தத்தில் இல்லத்தரசிகள்.!
நெடுந்தொடர்கள் மூலமாக டி.ஆர்.பி -யில் முன்னணியிலிருந்து வரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில், 3 முக்கிய நெடுந்தொடர்கள் அடுத்தடுத்து முடிவை நெருங்கவிருப்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். சன் தொலைக்காட்சியின் நெடுந்தொடர்கள் எப்போதும் டி.ஆர்.பி-யில் முன்னணியில் இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமுமில்லை.
ஆனால் சன் தொலைக்காட்சிக்கு போட்டியாக ஜீ தமிழ், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு நெடுந்தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன.ஆனாலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்கள் வாரந்தோறும் டி.ஆர்.பி-யில் முன்னணியிலிருந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் தான், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களில், 3 முக்கிய நெடுந்தொடர்கள் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து முடிவுக்கு வரவிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
அந்த பட்டியலில், சன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இரு நெடுந்தொடர்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா நெடுந்தொடர், செவ்வந்தி நெடுந்தொடர் மிஸ்டர் மனைவி நெடுந்தொடர் உள்ளிட்ட 3 நெடுந்தொடர்களும் அடுத்தடுத்து முடிவுக்கு வரவிருப்பதாக சொல்லப்படுகிறது.