பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விஜயின் தெறி பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ள இளம் நடிகர்.!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகயிருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா எதிரொலியால் படம் வெளியாகாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் தான் தெறி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளையும் படைத்தது.
இந்நிலையில் தற்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் இளம் நடிகர் வருண் தவான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.