திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உலக நாயகன் நடிக்கும் இந்தியன் 2 பற்றி வெளியான புதிய அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்!
இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் ஷங்கர். இவரது படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. சமீபத்தில் ரஜினியை வைத்து இவர் இயக்கிய 2 . 0 திரைப்டம் தமிழ் சினிமாவை இந்திய அளவில் புகழ்பெற செய்தது. தற்போது உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் சங்கர்.
இந்தியன் முதல் பாகம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட மாபெரும் வெற்றிப்படம். தற்போது இந்த இரண்டாம் பாகம் தயாராகி வருவதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இரண்டாம் பாகத்திலும் கமலஹாசன் கதாநாயகனான நடிக்கிறார். நடிகை காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சித்தார்த், பிரியா பவானி சங்கர்,ரகுல் பிரீத் சிங், நெடுமுடிவேண்டு, டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடத்தயுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.