மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபத்து எதிரொலி! கமலின் இந்தியன் 2 படக்குழு எடுத்த அதிரடி முடிவு!
லைகா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்க கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்தது, இந்நிலையில் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் ராட்சச கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தொடர்விசாரணை நடைபெற்றது.
தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து வரும் தடங்களால் படப்பிடிப்பு நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இதனை படக்குழு முற்றிலுமாக மறுத்தது.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாகவும்,மேலும் அதற்கு பதிலாக பல்லாவரத்தில் உள்ள பின்னிமில் வளாகத்தில் புதிதாக அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது