மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உண்மையிலே லோகேஷ் கனகராஜ்தானா இது.! ரொமான்ஸில் புகுந்து விளையாடுறாரே.! இணையத்தை கலக்கும் 'இனிமேல்' டீசர்
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்து முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இறுதியாக இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'லியோ' திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது. வசூல் சாதனையும் படைத்தது.
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் வைத்து ரஜினி 171வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் இணைந்து 'இனிமேல்' என்ற ஆல்பத்தில் நடித்துள்ளனர். இதனை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் ஸ்ருதி ஹாசன் இசையில் நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த ஆல்பம் பாடலின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. செம ரொமான்டிக்காக வெளிவந்த இந்த டீசரை கண்ட ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
#Inimel the game begins from 25th March.
— Raaj Kamal Films International (@RKFI) March 21, 2024
Mark the Moment!
Streaming exclusively on https://t.co/UXpv3RSFt6#Ulaganayagan #KamalHaasan #InimelIdhuvey #Inimelat25th@ikamalhaasan @Dir_Lokesh @shrutihaasan #Mahendran @RKFI @turmericmediaTM @IamDwarkesh @bhuvangowda84 @philoedit… pic.twitter.com/LCAju1D2eq