கைதாகிறாரா 2கே கிட்ஸின் கனவுக்கன்னி அமலா ஷாஜி?.. மோசடி செயலி விளம்பரத்தால் 45 ஆயிரம் இழந்தவர் குமுறல்.!



Instagram Famous Amala Shaji Trading Scam Legal Notice 

 

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு, சமூக வலைத்தளங்களில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் அமலா ஷாஜி. இவரை வரவேற்க ஆயிரம் ரசிகர்கள் இருப்பினும், கலாய்க்க இலட்சம் ரசிகர்கள் உண்டு என்றும் கூறலாம். 

பலர் கலாய்க்க தொடங்கியதில் இருந்து, அமலா ஷாஜியின் வளர்ச்சி என்பது அதிகரித்ததை தொடர்ந்து, தற்போது திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு குவிவதாக தெரியவருகிறது. சில படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்கும் அழைக்கின்றனர்.

இவ்வாறான யூடியூப் பிரபலங்கள் தங்களின் அவ்வப்போது ப்ரமோஷன் பணிகளை மேற்கொள்வது வழக்கம். அதற்காக விளம்பரங்களை கொடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து பணத்தையும் பெற்றுக்கொள்வார்கள். 

இவர்கள் ப்ரமோஷன் செய்யும் செயலிகள் உண்மையா? அதில் உள்ள தகவல் நம்பிக்கைக்கு உரியதா? என்ற விபரத்தை தெரிந்தும், தெரியாமலும் தங்களின் சம்பாத்யத்திற்காக போலியான தகவலை பகிர்வதும் உண்டு.

 

அப்படியாக அமலா ஷாஜி பகிர்ந்த தகவல் ஒன்றால், அவர் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அமலா ஷாஜியின் பின்தொடர்பாளர் ஒருவர், அமலாவின் ப்ரமோஷன் விளம்பரத்தை நம்பி வெவ்வேறு தருணத்தில் ரூ.45 ஆயிரம் வரை இழந்து இருக்கிறார். 

இதற்கு அமலாவுக்கு மெயில் செய்தும் பயனில்லை என்பதால், அவர் சட்ட நடவடிக்கையை நாடி இருக்கிறார். இதனால் அவரின் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி போலியான விளம்பரத்தை கொடுத்த நிறுவனமும், அதனை விளம்பரம் செய்யும் நபர்களின் மீதும் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது. குற்றம் உறுதியானால் ரூ.10 இலட்சம் அபராதம், 2 ஆண்டு சிறைவாசம் கிடைக்கலாம்.