மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
20 வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜயுடன் இணைகிறார் ஜெய்.? மனம் திறந்த பேட்டி.!
பகவதி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜெய். அந்தத் திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு சசிகுமார் இயக்கத்தில் ஜெய் நடித்த சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தத் திரைப்படம் தமிழ் திரை உலகில் அவருக்கு என்று ஒரு இடத்தையும் உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து ராஜா ராணி உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் தீரா காதல் என்ற திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய திரைப்படம் பற்றியும் பகவதி படத்தில் விஜயுடன் நடித்த அனுபவங்கள் பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் ஜெய் அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.
தளபதி 68 பற்றிய அறிவிப்பு வெளியானதும் இயக்குனர் வெங்கட் பிரபு என்று தெரிந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். பகவதி முதல் படம் என்பதால் தன்னால் சரியாக நடிக்க முடியவில்லை என்று கூறிய அவர் தளபதியுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்ற காத்துக் கொண்டிருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். வெங்கட் பிரபு தனக்கு நல்ல நண்பர் என்பதால் நிச்சயமாக மீண்டும் ஒரு வாய்ப்பு அமையலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஜெய்.