மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல சினிமா தயாரிப்பாளரின் மகனுடன்... சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம்.?!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான சாகுந்தலம் திரைப்படம் ரசிகர்களிடம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. தற்போது இவர் குஷி படத்தின் சூட்டிங்கில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் கடந்து 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு இருவரும் தங்களது சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த வருடம் சமந்தா மையோசிட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தனது துறை பணிகளை தொடங்கி இருக்கிறார். நடிப்பு மற்றும் உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த மே மாதம் இருபதாம் தேதி பிரபல சினிமா தயாரிப்பாளர் டிவிவி தனையாவின் மகன் கல்யாண் என்பவருக்கும் திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவலால் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இதன் உண்மை நிலவரம் வெளியாகியிருக்கிறது. அந்த செய்திகளின்படி சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடக்கவில்லை என்றும் கல்யாண் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சமந்தா என்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாகவும் தற்போது தெரியவந்திருக்கிறது.