திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பந்தயம் அடிச்சிச்சா..." ஷாருக்கான்-அட்லீ கூட்டணி.? .. வெளியான ஜவான் திரைப்படத்தின் முதல் விமர்சனம்.!
தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் முதன்மையானவராக தன்னை நிலை நிறுத்தியவர் அட்லீ. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.
தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். தனது ஐந்தாவது படத்திலேயே ஷாருக்கான் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது.
ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லீஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோனே மற்றும் யோகி பாபு ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக சொல்லப்படும் இந்த திரைப்படம் வருகின்ற 7-ம் தேதி வெளியாக இருக்கிறது
#JawanReview :⭐⭐⭐⭐#Jawan is a fascinating crime filled movie told from multiple perspectives with perfect pace & cinematography. An absolute entertainer package with action, comedy, thrill & what else.. @iamsrk @VijaySethuOffl & @Atlee_dir keep us on the edge of our seat. pic.twitter.com/apMfQyQbHp
— Always Bollywood (@AlwaysBollywood) September 4, 2023
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியிருக்கிறது. ஆல்வேஸ் பாலிவுட் என்ற X சமூக வலைதளத்தில் இதன் விமர்சனம் வெளியாகி இருக்கிறது. அந்த விமர்சனத்தில் ஜவான் திரைப்படம் ஆக்சன், காமெடி, திரில்லர் என கலந்து சீட்டின் நுனியில் உட்கார வைக்கக்கூடிய விறுவிறுப்பான திரைப்படமாக இருக்கிறது என அந்த சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விமர்சனத்தின் மூலம் ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது.