96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அட இவரா..? பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியாகவும் லஷ்மி மேனன்..!
மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரைப்படத்தில் கால் பதித்தவர் லட்சுமி மேனன். இவர் தனது பள்ளி படிப்பு பயிலும் போதே சினிமாவில் நடிக்க தொடங்கியவர். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய முதல் படத்திலே நல்ல வரவேற்பை பெற்று ரசிகர் பலரது மனங்களை கவர்ந்தார்.
இதனையடுத்து இவரது நடிப்பில் வெளியான கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் சமீபகாலமாக இவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்த லட்சுமி மேனன் தற்போது மலை, சப்தம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனராக களமிறங்கும் முருகேஷ் பூபதி இயக்கத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.