மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாருக்கு கொக்கி போடும் பிரபல தயாரிப்பாளர்.. வெளியான தகவல்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க, பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவருடைய தயாரிப்பில் வெளியான கோமாளி, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஆனால் இவர் தயாரித்து முடித்துள்ள சில திரைப்படங்களே இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.