மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்த ரஜினிகாந்த்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாக 450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த தலைவர் 171வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு முன்பாக ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், பகத் பாஸில், அமிதாப்பச்சன் மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட துறை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.