மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதனால்தான் உதவியாளர் வெளியேற்றப்பட்டாரா.? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய அறிவிப்பு.!
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை நடித்து முடித்தவுடன் எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தன்னுடைய 171-வது திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றார்.
இந்த திரைப்படத்திற்கான கதை எழுதும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், சில மாதங்கள் வரையில் சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறயிருப்பதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இயக்குனர் யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் அவருடன் திரைகதை, வசனம் எழுதுவதில் உதவியாளராக பணிபுரிந்து வந்த இயக்குனர் ரத்னகுமார் ரஜினியின் 171-வது திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்தான், ரத்னகுமார் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான இயக்கத்திலிருப்பதால், ரஜினியின் திரைப்படத்தில் அவர் பணியாற்றவில்லை என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். இதற்கு நடுவே விஜயின் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார், காக்கா, கழுகு கதை தொடர்பாக, பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து, ரஜினியை கருத்தில் வைத்து தான் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அவரை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
ஆகவே சமூக வலைதளங்களிலிருந்து இயக்குனர் ரத்னகுமார் திடீரென்று வெளியேறினார் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அடுத்த திரைப்படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதால், அந்த திரைப்படத்தில் இயக்குனர் ரத்னகுமார் பணி புரிந்தால் அது சரியாகயிருக்காது என்பதன் காரணமாக, அவர் பணி புரியவில்லை என்று சொல்லப்படுகிறது.