திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படிப்பின் அருமை தெரிகிறது.. இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் அறிவுரை..!
சமீபத்தில் வெளியாக உள்ள வெங்கி அத்லூரி இயக்கிய வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படமானது வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகள் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தில் நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி அத்லூரி , பாரதிராஜா என பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் பேசியதாவது, படத்தில் வரும் டீசரை போல படிப்பை பிரசாதம் போன்று கொடுங்கள், ஹோட்டலில் குடுப்பது போன்று விற்காதிர்கள் என்று வசனம் வரும்.
அதுதான் திரைப்படத்தின் மையக் கருத்தாக உள்ளது. பள்ளியில் படிக்கும்போது பெற்றோர்கள் பள்ளி கட்டணம் செலுத்தி விடுவார்கள் என்று அலட்சியமாக சுற்றி வந்தேன். ஆனால் என் பிள்ளைகளை படிக்க வைக்கும் போதுதான் எனக்கு அதன் அருமை தெரிகிறது. படிப்பு என்பது வாழ்வில் மிக அவசியமான ஒன்றாகும்.
அதனை எப்போதும் கைவிடக்கூடாது எண்ணம் போல் தான் வாழ்க்கை படிப்பில் கவனம் செலுத்துங்கள். நான் சொல்லும் சிலவற்றை உங்களுக்கு பிடிக்காது இருந்தாலும் நான் உங்கள் மீது இருக்கும் உரிமையில் சொல்கிறேன். எனது காரை பின்தொடர்ந்து வராதீர்கள்.
உங்களை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்போதும் இது போன்றவற்றை ஊக்குவிக்க மாட்டேன். உங்களுக்கென ஒரு குடும்பம் இருக்கிறது. அதை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் கூறியவற்றை பின்பற்றுங்கள் என்று அவர் பேசியுள்ளார்.