மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் போக வேண்டிய நேரம் வந்துவிட்டது.! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரட்சிதா அப்படி என்னதான் ஆச்சு.?
கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரட்சிதா மகாலட்சுமி கன்னட நெடுந்தொடர்களில் முதலில் நடிக்க தொடங்கினார். அங்கே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி தமிழ் சின்னத்திரைகளிலும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
முதலில் ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம், சந்திப்போம் தொடரின் மூலமாக அறிமுகமானார். இந்த தொடரில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பல்வேறு வாய்ப்புகள் வர தொடங்கின. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன்-2 தொடரில் நடித்ததன் மூலமாக, அவருக்கு மேலும் புகழ் கிடைத்தது.
பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில ஆண்டுகள் சென்ற பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் சென்ற பல மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரட்சிதா, அந்த வீட்டில் நன்றாக விளையாடி ஒரு சில வாரங்கள் அந்த வீட்டில் தங்கினார். அப்போது பிக்பாஸ் வீட்டிலிருந்த ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் பேசிய பல்வேறு விஷயங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் அதிகமாக பகிரப்பட்டனர்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரட்சிதாவுக்கு அதன் பிறகு பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி பல திரைப்படங்களிலும் அவர் நடிக்க தொடங்கினார். அந்த விதத்தில், தற்போது ஃபயர் என்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகின்றார். அந்த திரைப்படத்தில் அவருடைய தோற்றம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அதை கண்ட ரசிகர்கள் என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இத்தகைய நிலையில் தான், ரட்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரையில் அமர்ந்தபடி அவர் போட்டிருக்கும் அந்த பதிவில், "நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே என் வாழ்க்கையை நான் விரும்பும்படி வாழ விடுங்கள்" என தெரிவித்துள்ளார்.