மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அறிவே இல்லையா? இப்படியெல்லாம் கேக்குறாங்க.! செம கடுப்பான தொகுப்பாளினி ஜாக்குலின்.! ஏன் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளம். அவ்வாறு விஜய் டிவியில் ரக்ஷனுடன் இணைந்து கலக்கப்போது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியை தொகுத்து மக்கள் மனதை கவர்ந்து பிரபலமானவர் ஜாக்குலின். அதனை தொடர்ந்து அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பின்னர் ஜாக்குலின் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார். ஆனாலும் அதனை தொடர்ந்து அவருக்கு பெருமளவில் படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் தேன்மொழி B.A ஆண்டாள் அழகர் சீரியலில் முன்னணி ரோலில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது தொகுப்பாளர் அவரிடம், நீங்கள் லெஸ்பியனா? என கேட்டுள்ளார். அதற்கு அவர் மூன்று நண்பர்களுடன் போட்டோ போட்டால் இப்படிதான் பேசுகிறார்கள். ஏன் என்னை இந்த மாதிரி நினைக்கிறாங்க. அவங்களுக்கு அறிவே இல்லையா? என்னை மட்டும் கிடையாது. இதுபோல பல பிரபலங்களையும் இவ்வாறுதான் கூறுகிறார்கள் என ஆவேசமாக பேசியுள்ளார்.