#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. என்ன இப்படி ஆகிருச்சே! நடிகர் ரஜினியின் சாதனையை முந்திய சூர்யா!! எதில் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். இந்த படத்திற்கு எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஜெய்பீம் படத்தலைப்பு வெளியான உடனே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் அதிகரித்தது.
ஜெய்பீம் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த பட டீசர் சமீபத்தில் வெளிவந்து 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆனால் அதன் பிறகு வெளிவந்த ஜெய்பீம் டீசர் பெருமளவில் வைரலாகி 13 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து அண்ணாத்த டீசரை முந்தி சாதனை படைத்துள்ளது.