திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் பட வில்லன் விநாயகன் காவலருடன் ரகளையில் ஈடுபடும் வீடியோ..
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்ற நடிகராக வலம் வருகிறார்.
தமிழில் முதன் முதலில் விஷால் கதாநாயகனாக நடித்த திமிரு திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து இவருக்கு பெயர் பெற்று தந்தது.
இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் வில்லன் நடிகராகவும், குணசித்திர கதாபாத்திரங்களும் தமிழில் நடித்திருக்கிறார் விநாயகன். ஆனால் அப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இது போன்ற நிலையில், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் விநாயகன் சமீபத்தில் கேரளாவில் போலீஸ் ஸ்டேஷனில் குடித்துவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டதால் கைதாகி பின் ஜாமினில் வெளிவந்தார். தற்போது இவர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா - எர்ணாகுளம் காவல் நிலையத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடிகர் விநாயகன் கைது#Vinayagan #Jailer #Kerala pic.twitter.com/YtRA59GYRp
— Kᴀʙᴇᴇʀ - ஆட்டோ கபீர் (@Autokabeer) October 24, 2023