மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எட்டு காரில் எது வேணும்னு ஓட்டிப் பாத்து சொல்றேன்" இயக்குனர் நெல்சன் கலக்கல் பதில்!
தமிழ் சினிமாவில் 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். தொடர்ந்து இவர் சிவ கார்த்திகேயனை வைத்து டாக்டர், மற்றும் விஜயை வைத்து பீஸ்ட் படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்'. படத்தையும் நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படம் இரண்டு வாரங்களில் 550 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.
எனவே, கலாநிதி மாறன், 8 சொகு கார்களை காட்டி, இதில் எது வேண்டும் என்று நெல்சனிடம் கேட்டதாகவும், அதற்கு நெல்சன், 'எது வேண்டுமென்று தான் ஓட்டி பார்த்து சொல்வதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், சன் பிக்சர்சின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பும் நெல்சனுக்கே தரப்போவதாகவும், சம்பளம் ஜெயிலர் பட சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிகம் இருக்கும் என்றும், நெல்சனிடம் கலாநிதி மாறன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.