திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அலப்பறை கிளப்புறோம், தலைவரு நிரந்தரம்"., கமலஹாசனை பின்னுக்கு தள்ளிய சூப்பர்ஸ்டார்!!
உலகநாயகன் கமல் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' திரைப்படம் வெளியாகி மாபெரும் வசூலை குவித்தது. இந்த திரைப்படம் லோகேஷ்க்கு மட்டுமில்லாமல் கமலஹாசனுக்கு பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வரும் முன்னே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. பின், காவலா பாடல் வெளியாகி பெரியளவு ஹிட் கொடுத்தது.
தற்போது, தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் 'விக்ரம்' படத்தின் வசூலை முறியடித்து 2வது இடத்துக்கு முன்னேறியது ஜெயிலர் திரைப்படம்.
முதலாம் இடத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.