மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புகழ்பெற்ற கவிஞர், ஒலிபரப்பாளர் 83 வயதில் காலமானார்; சோகத்தில் ரசிகர்கள், குடும்பத்தினர்.!
தேசிய அளவில் புகழ்பெற்ற காஷ்மீரி கவிஞர், ஒளிபரப்பாளர் பரூக் நாஸ்க்கி (வயது 83). இவர் காஷ்மீரில் பிரதானமாக ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்த நாஸ்கி ரேடியோவின் ஒலிபரப்பாளர் மற்றும் எழுத்தாளராக தனது வாழ்க்கையை தொடங்கி உயர்ந்தவர் ஆவார்.
தனது கருத்துக்களை கவிதைகளாக தொகுத்து வழங்கியவர், காஷ்மீர் இலக்கியம் தொடர்பான பல நூல்களை வெளியிட்டு இருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று அவர் வீட்டில் இருந்தபோது, இயற்கையாக அவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது. அவரது மறைவு நாஸ்கியின் பின்தொடர்பாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.