#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆத்தாடி! விஜய்யுடன் நடிக்கும் நடிகை ஸ்ரீ தேவியின் மகளுக்கு இவ்வளவு சம்பளமா? வாயை பிளந்த ரசிகர்கள்!
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அதனை தொடர்ந்து அவர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
அவர்களது மூத்த மகள் ஜான்வி கபூர் தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் தற்போது படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் ஜான்வி கபூர் இந்தி பட இயக்குனர் கரண் ஜோகர் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கஉள்ளார். அப்படத்தை புரி ஜெகநாத் இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இளம்பெண்களின் கனவுகண்ணனாக விளங்கும் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார்.
இதற்கிடையே, இந்த படத்தில் நடிக்க நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு ரூ.3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களுக்கு வழங்கப்படும் அதிகமான சம்பளம் இதுதான் எனவும் கூறப்படுகிறது.