திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட்லியின் பாலிவுட் என்ட்ரி.! ஜவான் திரைப்படம் வெற்றியா தோல்வியா..
கடந்த செப்டம்பர் 7ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியானது "ஜவான்" திரைப்படம். இதன் மூலம் தமிழ் இயக்குனர் அட்லீ நேரடி பாலிவுட் படத்தை இயக்கிய பெருமையைப் பெற்றுள்ளார். ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். உலகளவில் ஒரே நாளில் வெளியான ஜவான் திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது. ஆனால் இந்தியில் இப்படத்தின் வசூல் சரிவடைந்துள்ளது.
தொடர்ந்து ஜவான் திரைப்படம் வெளியாகி 15ஆவது நாளில் 1000கோடி வசூலை நெருங்கி உள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் சேர்த்து முதல் வாரத்தில் 389.88 கோடி வசூல் செய்திருந்தது. பின்னர் 10ம் நாள் 31.8கோடி ரூபாயும், 15ம் நாள் 8.85கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 526.73 கோடிவசூல் செய்த ஜவான் திரைப்படம், அதிக வசூல் செய்த நான்காவது ஹிந்தி திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. உலகளவில் ஜவான் திரைப்படத்தின் வசூல் 1000கோடி ரூபாயை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.