மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடித்தது இவர்களா! என்ன இருந்தாலும் சிவகார்த்திகேயன்- சூரி அளவுக்கு ஹிட்டாகிருக்குமா.!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற கலகலப்பான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். கடந்த 2013 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் முழுவதும் காமெடி நிறைந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இதில் ஹீரோயினாக நடிகை ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.
மேலும் காமெடி நடிகராக, சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி கலக்கியிருந்தார். இதில் இடம்பெற்ற பல காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்களை கவர்ந்து திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் ஜீவா மற்றும் சந்தானம்தான் நடித்தார்களாம்.
ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியாமல் போகவே பின்னர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களது கூட்டணி பெரும் வெற்றியடைந்த நிலையில் அவர்கள் தொடர்ந்து ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளனர். மேலும் அவர்களது காம்போ தற்போது வெற்றிக் கூட்டணியாக வலம் வருகின்றனர்.