திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. ஜேஜே பட நடிகையா இது! இப்போ எப்படியிருக்கார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் ஒரு படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தாலும் பின்னர் பெருமளவில் படங்களில் நடித்து சினிமாதுறையில் ஜொலிப்பதில்லை. கடந்த 2003 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜேஜே. இதில் நடிகர் மாதவன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா கோத்தாரி.
இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். முதல் படத்திலேயே க்யூட்டான நடிப்பால், அழகால் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். ஆனால் அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் பெருமளவில் படங்களில் கமிட்டாகி நாயகியாக நடிக்கவில்லை.
பின்னர் அவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி படத்தில் இடம்பெற்ற வாடா வாடா வாடா பையா என்ற ஒற்றைப் பாடலுக்கு கிளாமராக நடனமாடி இருந்தார். நடிகை ப்ரியங்கா கோத்தாரி தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.