மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
71 வயது முன்னணி நடிகருக்கு ஜோடியாகிறாரா நடிகை ஜோதிகா.! அட.. யாருடன் தெரியுமா?? வெளிவந்த தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் சினிமாதுறையில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் நடிகர் சூர்யாவை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் நடிகை ஜோதிகா சினிமாவிலிருந்து விலகி எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் அவர் மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க அரம்பித்து ஹீரோயின்களுக்கு, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நடிகை ஜோதிகா தற்போது மலையாள சினிமாவில் Jeo Baby இயக்கத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் மலையாள படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.