திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மேடையில் சுழன்று சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா! இணையத்தை கலக்கும் அசத்தல் வீடியோ!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
மேலும் அவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகாவுக்கு ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நடிகை சிம்ரன் ஜோதிகாவுக்கு வழங்கினார்.
இந்த விருது விழாவில், நடிகை ஜோதிகாவிடம் சிலம்பம் சுத்த ரசிகர்கள் உட்பட அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்ற ஜோதிகா, மேடையில் அனைவர் முன்பும் சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
THE REAL SHERO: #Jyothika does the Silambaattam terrifically! #jfwmovieawards2020 pic.twitter.com/jA5jvcTSLc
— JFW (@jfwmagofficial) March 14, 2020