திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜோவிகா என்னுடைய மகள் இல்லை... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை வனிதா!! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நாளுக்கு நாள் பரிச்சயம் ஆகி வருபவர் தான் ஜோவிகா. இவர் வீட்டில் பேசும் விதத்தை பார்த்து மக்கள் தாய்க்கு மகள் சலித்தவர் இல்லை என கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜன், ஜோவிகா என்னுடைய மகள் இல்லை என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.
அதன் பிறகு தான் சோசியல் மீடியாவில் ஜோவிகாவின் தந்தை யார் என்ற சர்ச்சையான கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது அந்த சர்ச்சையான கேள்விக்கு நடிகை வனிதா பதில் அளித்துள்ளார். அதாவது வனிதா முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டாவதாக ராஜன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அருண் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். ஆக இந்த மூன்று திருமணத்தில் பிறந்தவர்கள் தான் ஸ்ரீஹரி, ஜோவிகா, ஜெய்னிதா ஆகிய மூன்று பேர். இப்ப என்ன ஜோவிகா யாருக்கு பிறந்தவர் என்ற உண்மை தெரிய வேண்டுமா.? இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் ஜோவிகா, ஆகாஷின் மகள் தான்.
ஆனால் ஜோவிகா தந்தையின் பெயரை தன் பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்ள விரும்பவில்லை. இருப்பினும் ஆகாஷின் பெயரை தான் இனிஷியல் ஆக ஜோவிகாவிற்கு வைத்திருக்கிறேன் என்றும் கூறி சர்ச்சையான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வனிதா.