திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"மம்முட்டி தான் ரியல் சூப்பர் ஸ்டார்" ஜோதிகாவின் சர்ச்சையான பேட்டி..
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய "வாலி" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் ஜோதிகா. ரஜினி, பிரபு, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள இவர், கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இதையடுத்து நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவுக்கு தற்போது தியா என்று ஒரு மகளும், தேவ் என்று ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகள் பிறந்து, வளரும் வரை சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் ஜோதிகா.
இந்நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள இவர், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் முதிர்ச்சியான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மம்மூட்டியுடன் "காதல் தி கோர்" என்ற மலையாளப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், "வித்தியாசமான கதையில், நமக்கே சவாலான கேரக்டரில் நடிப்பவன் தான் நல்ல ஹீரோ என்று மம்மூட்டி சார் என்னிடம் கூறினார். நான் பல சூப்பர்ஸ்டார்களுடன் நடித்துள்ளேன். ஆனால் மம்மூட்டி தான் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோ" என்று ஜோதிகா கூறியுள்ளார்.