மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"17 வயதில் சினிமாவிற்குள் வந்து விட்டேன்" கண்கலங்கி பேசிய ஜோதிகா..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜோதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
90களில் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் இருந்து விலகி விட்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, தற்போது மலையாளத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் பணிகளுக்காக பிரபல தொலைக்காட்சி சேனலிற்கு பேட்டியளித்துள்ளார் ஜோதிகா.
அப்டேட்டியில் ஜோதிகா தன் ஆரம்பகால சினிமா பயணத்தை குறித்து பேசி இருந்தார். அவர் கூறியது, "17 வயதில் சினிமாவிற்குள் வந்து விட்டதால் எந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை. பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தால் பிரபலமாகிவிடலாம் என நினைத்தேன். தற்போது தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.