மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"என் மாமனார் அப்படி சொல்லவே இல்லை!" சிவகுமார் குறித்து ஜோதிகா கருத்து!
1999ம் ஆண்டு எஸ். ஜெ. சூர்யா இயக்கிய "வாலி" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார் ஜோதிகா. இதையடுத்து 2000ம் ஆண்டு "பூவெல்லாம் கேட்டுப்பார்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வாலி படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. இவர்களுக்கு தற்போது தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஜோதிகா, "நான் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தபோது ஹிந்திப் படத்தில் நடிக்க வந்துவிட்டேன். அப்போதே வசந்த் சார் எனக்கு அடுத்த படத்திற்கு கதை சொன்னார்.
திருமணத்திற்குப் பிறகு என் மாமனார் என்னை நடிக்கக் கூடாது என்று சொன்னதாகச் செய்திகள் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. உண்மையில் அவர் தான் எனக்கு மிகவும் சப்போர்ட்டாக உள்ளார். சமீபத்தில் நடித்த மலையாள படத்தை அவருக்காக தனி ஷோ போட்டுக் காட்டினேன்" என்று கூறினார்.