மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயங்கர குண்டாகி அடையாளமே தெரியாமல் மாறிய காஜல்! கிண்டல் செய்தவர்களுக்கு கொடுத்த கியூட்டான நெத்தியடி பதில்!!
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் தற்போது அவர் கர்ப்பமாக உள்ளார். அதனால் அவர் நன்கு உடல் எடை அதிகரித்துள்ளார். இந்த நிலையில் காஜலின் லேட்டஸ்ட் புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காஜல் என் வாழ்க்கை, என் உடல், வீடு மற்றும் மிக முக்கியமாக பணியிடத்தில் நான் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை அனுபவித்து வருகிறேன். மேலும் சில உருவ கேலிகளும் செய்யபடுகிறது. அன்பாக இருக்க கற்றுக்கொள்வோம், அது கடினமாக இருந்தால், வாழ்வோம் வாழவிடுவோம்.
கர்ப்ப காலத்தில் உடல்எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் குழந்தை வளரும்போது ஹார்மோன் மாற்றங்களால் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாகி, உடல் பாலூட்டுவதற்குத் தயாராகிறது. நாம் வழக்கத்தை விட மிகவும் சோர்வாக நேரிடும். மேலும் பிரசவத்திற்குப் பிறகு, நாம் முன்பிருந்த அழகை மீண்டும் பெற சிறிது காலமாகலாம், மேலும் அதனை திரும்பப் பெற முடியாமலேயே போகலாம்.
இந்த மாற்றங்கள் இயற்கையானவை. இச்சமயங்களில் உங்களது உணர்வுகளை நண்பர்கள், குடும்பத்தினரிடம் வெளிப்படுத்துங்கள். நம் வாழ்வின் மிக அழகான, விலைமதிப்பற்ற கர்ப்ப காலத்தில் தேவையில்லாத, எதிர்மறையான மனநிலை அவசியமில்லை. குழந்தை பிறக்கும் போது நாம் அனுபவிக்க இருக்கும் கொண்டாட்டத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.