மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"புகைப்படத்தில் இருக்கும் இந்த பாப்பா யார் தெரியுமா?!" "தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர்!"
2004ம் ஆண்டு "ஹோ கயா நா" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். இதையடுத்து 2007ம் ஆண்டு "லட்சுமி கல்யாணம்" என்ற படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து 2008ம் ஆண்டு "பழனி" படத்தில் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல், கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் தமிழின் அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்து முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களிலும் அங்குள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் காஜல் அகர்வால்.
இந்நிலையில் தற்போது கமலின் "இந்தியன் 2" படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் "அட! நம்ம காஜலா இது?" என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.