மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணத்தை பிடிங்க.! ஆளை விடுங்க.! உதயநிதி படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால்..! அந்த முன்னணி ஹீரோதான் காரணமா?
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சீரஞ்சீவியுடன் நடிப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் படத்திலிருந்து காஜல் அகர்வால் விளக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகிறது.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக கோமாளி படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் காஜல் அகர்வால்.
இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் நடிப்பதாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அதற்கான முன்பணமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே கொரட்டல சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் புது படம் ஒன்றில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் சிரஞ்சீவிக்காக உதயநிதி ஸ்டாலின் படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்காக பெறப்பட்ட முன் பணத்தையும் காஜல் அகர்வால் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.