#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய பிரபல கவர்ச்சி நடிகையின் மரணம்! வருத்தத்துடன் காஜல் வெளியிட்ட பதிவு!!
தமிழ் சினிமாவில் ஒப்பனை கலைஞராக அறிமுகமாகி, நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானவர் சிலுக்கு ஸ்மிதா. இவரது உண்மையான பெயர் விஜயலக்ஷ்மி.
ஹீரோயினாக வரவேண்டும் என கனவோடு திரைத்துறைக்குள் நுழைந்த இவர் கடைசி வரை கவர்ச்சி நடிகையாகவே பிரபலமானார். மேலும் 17 வருட சினிமா வாழ்க்கையில் சிலுக்கு ஸ்மிதா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
மனதளவில் குழந்தை குணம்கொண்ட இவர் வாழ்க்கையில் ஏமாற்றம், காதல் தோல்வி, படத்தயாரிப்பால் நஷ்டம் என பல வழிகளில் மன உளைச்சலுக்கு ஆளானார் .இதனை தொடர்ந்து செப்டம்பர் 23, 1996 தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று அவரது 23 வது இறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் வருத்ததுடன் அஞ்சலி செலுத்தி உங்களது இடத்தை யாராலும் பூர்த்தி செய்யமுடியாது என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
RIP sweet heart 💔
— Kaajal Pasupathi (@kaajalActress) September 23, 2019
It's your 23rd Death Anniversary ,
& we still miss you.
You're Irreplaceable 💚 😒 pic.twitter.com/l68K8DPKie