மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் மகனுக்கு முதலில் விஜய்யின் இந்த படத்தைதான் காட்டுவேன்.! நடிகை காஜல் அகர்வால் கூறியதை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர் நீல் என பெயர் வைத்துள்ளார்.
குழந்தை பிறந்த பிறகும் காஜல்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்துள்ள கோஸ்டி படம் மார்ச் 17 ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் காஜலிடம் அவரது மகன் குறித்து கேட்கபட்டது. அதற்கு அவர், அவனது 8 வயது வரை எந்த படத்தையும் அவனுக்கு காட்டப் போவதில்லை. 8 வயதானதற்கு பிறகு முதலில் தான் நடித்த துப்பாக்கி படத்தையே அவனுக்கு போட்டு காட்டுவேன் என கூறியுள்ளார்.