"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்த குட்டி பசங்களா இது.. இப்படி ஆளே மாறிட்டாங்களே.?
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் 'காக்கா முட்டை'. இப்படம் 2014 ஆம் வருடம் வெளியாகி மிகப்பெரும் ஹிட்டானது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இப்படத்தை இயக்கினார்.
மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ் திலக், யோகி பாபு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றனர். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு திறமையின் மூலம் மிகபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது என்று சொல்லலாம்.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான 'காக்கா முட்டை' திரைப்படத்தில் சிம்பு சிற்ப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விக்னேஷ் மற்றும் ரமேஷ் என்ற சிறு குழந்தைகள் நடித்திருந்தனர். தேசிய விருதை பெற்று தந்த இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இது போன்ற நிலையில், 'காக்காமுட்டை' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்ப புகைப்படத்தில் இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர்.