மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பை முடித்த கமல்ஹாசன்.. வெளியான அசத்தல் தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, பிரபாஸ் உடன் கல்கி 2898 ஏடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார்.
இதில், கல்கி ஏடி 2898 என்ற படத்திற்காக உலகநாயகன் கமல்ஹாசன் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கல்கி கல்கி ஏடி 2898 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.