மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வித்தியாசமான கெட்டப்பில் கலக்கும் உலகநாயகன்.. அந்த படத்திற்காக இருக்குமோ.? ரசிகர்கள் ஆச்சரியம்.!
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் கமலஹாசன். இவர் வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவரின் நடிப்பு திறமையால் மக்களை கவர்ந்து உலகநாயகன் எனும் பெயர் பெற்றிருக்கிறார்.
மேலும் சினிமாவில் சில ஆண்டுகளாக கமலஹாசனின் படங்கள் தொடர் தோல்வியை அடைந்து வந்தன. இதன்படி சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. 'விக்ரம்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி கமலஹாசனின் நடிப்பு திறமையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இது போன்ற நிலையில், திரைப்படத்துறை மற்றும் அரசியலிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் கமலஹாசன், தற்போது மாடலிங்கத் துறையிலும் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் 'ஹவுஸ் ஆஃப் கலர்' பிராண்டிற்காக நடத்தப்பட்ட போட்டோ சூட்டில் கமலஹாசன் கலக்கலான உடையில் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.