திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாட்சப் யுனிவர்சிட்டி வேஸ்ட்., புராணத்தையும், வரலாற்றையும் கலந்துவிடக்கூடாது - பிக்பாஸில் கமல்ஹாசனின் வெளிப்படையான பேச்சு..!!
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்புபெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஆறாவது சீசன் நேற்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
பிக்பாஸ் 6 சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸில் பேசிய அவர், "சரித்திரத்தில் உண்மை என்ன என்பதை தேடுவது தான் நியாயமானதாக இருக்கும்.
வாட்சப் யுனிவர்சிட்டி வாழ்க்கைக்கு என்றும் உதவாது. புராணத்தையும் வரலாற்றையும் கலந்துவிடக்கூடாது. இரண்டையும் தனித்தனியாகவே வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.