மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியன் 2 திரைப்படம் குறித்த கமலஹாசனின் கருத்து.. அதிர்ச்சி அடைந்த இயக்குனர் சங்கர்.?
தமிழ் திரையுலகில் 1996 ஆம் வருடம் திரையிடப்பட்ட திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா போன்ற கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார்.
'இந்தியன்' திரைப்படம் அந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்படத்தின் காரணமாக 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப் போவதாக நீண்ட வருடங்களாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் 'இந்தியன் 2' திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமாகிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு திடீரென்று பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு பொங்கலன்று ரிலீஸ் ஆகப்போவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதன்படி கமலஹாசன் 'இந்தியன் 2' திரைப்படத்தை பார்த்து அருமையாக இருக்கிறது என்று பாராட்டியதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.