மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" - இந்தியன் கதாநாயகன் அமெரிக்காவில் உரை
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் கொண்டாடிய சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்தியன் பட கதாநாயகன் கமலகாசன் தன் மகள் சுருதிஹாசனுடன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று உரையாற்றினார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சவாளியை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை நியூயார்க் நகரில் மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த நிகழ்வில் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆண்டு நடந்த நிகழ்வில் திரையுலக நடிகரும், மக்கள் நீதி மன்ற தலைவருமான கமலகாசன் கலந்து கொண்டார். அவருடன் அவரது மகளும் நடிகையுமான ஸ்ருதிகாசன், நடிகை பாஜ குமார் ஆகியோரும் கலந்துகொண்டார்கள். அங்கு அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு பேசிய கமலகாசன், "எனது பெயர் கமலகாசன், நான் ஒரு இந்தியன். நன் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். கேரளாவில் கடும் வெள்ளம் பாதித்துள்ளது. தமிழகத்திலும் சில பகுதிகளில் வெள்ளம் பாதித்துள்ளதால் அந்த பணிகளை நான் மேற்கொள்ள அங்கு செல்ல வேண்டும். இந்த மகிழ்ச்சி இங்கு இப்படியே இருக்கட்டும்" என்று கூறினார்.