"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
நம்பர் 1 இடத்தில் இருக்கும் கோமாளி படம்! சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா - உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி தற்போது தனது 24 வது படமாக பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகிய கோமாளி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலும் நல்ல முறையில் உள்ளது.
தமிழ்நாட்டு வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்த கோமாளி படம் சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 4.12 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.